திருநெல்வேலி

தியாகராஜநகரில் பாதாள சாக்கடை  உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

DIN

பாளையங்கோட்டை தியாகராஜநகர் குமரேசன் காலனியில் பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
திருநெல்வேலி மாநகராட்சி 19-ஆவது வார்டுக்குள்பட்ட தியாகராஜநகர் குமரேசன் காலனியில் 6  தெருக்கள் உள்ளன.  இந்த தெருக்களின் மையப்பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக சில
தினங்களுக்கு முன் குழிகள் தோண்டப்பட்டன.  இந்தக் குழிகளை மூடாததால் தெருவில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் குமரேசன் காலனியில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைப்பதற்காக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மண் பரிசோதனை செய்தனர். இதையறிந்த
குமரேசன் காலனி பகுதி மக்கள், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உந்து நிலையம் அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து
அதிகாரிகள் மண் பரிசோதனையை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT