திருநெல்வேலி

அம்பை அரசு மருத்துவமனையில் நெல்லை எம்.பி. ஆய்வு

DIN

திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா.ஞானதிரவியம், அம்பை பகுதியில் வாக்காளர்களுக்கு செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்ததுடன்,  அரசு மருத்துவமனையில் ஆய்வும் நடத்தினார்.
 அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குட்பட்டபகுதிகளான, ஊர்க்காடு, சாட்டுப்பத்து, கோவில்குளம் ஆகிய ஊர்களில்  அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, கோயில்குளம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஆய்வில் ஈடுபட்டார்.   மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை விவரத்தையும், அங்குள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்தும்  கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி வெங்கடாஜலபதி, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நகரச் செயலர்கள் பிரபாகரன், கணேசன், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜான் நிக்கல்சன், இலக்கிய அணி ராமசாமி, காங்கிரஸ் நகர தலைவர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் வடிவேல், மதிமுக நகரச் செயலர் முத்துசாமி மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT