திருநெல்வேலி

பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா

பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த ஜூன் 1இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த ஜூன் 1இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஊத்துமலை ஆலய அருள்பணியாளர் வியான்னிராஜ் திருப்பலி நிறைவேற்றினார்.  
தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் திருப்பலி, மறையுரை நடைபெற்றன. ஆயர்கள் திண்டுக்கல்  லாரன்ஸ், பாம்பன்விளை சகாயராஜ், கோயம்புத்தூர் பாத்திமா அன்னை ஆலயம் பெர்னாட்ஷா, திருச்சி இருதயசாமி, ஸ்டேன் ஆகியோர் மறையுரை வழங்கினர். 
நிறைவு நாளான புதன்கிழமை இரவு  புனித அந்தோணியார் திரு உருவ பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற பவனியில் பங்குமக்கள் திரளாக கலந்துகொண்டனர். வியாழக்கிழமை காலை திருவிழா திருப்பலி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை  அருள்பணி அமிர்த ராசா சுந்தர் மற்றும் அருள் சகோதரிகள், பங்குமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT