திருநெல்வேலி

காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு பிடியாணை

பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில்,  வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு  பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். 

DIN


பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில்,  வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு  பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். 
பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பைச் சேர்ந்த சரவணன் மனைவி சுமதி (30). இவர் கடந்த 2014இல் தனது கணவர் சரவணன் மீதான வழக்கு விசாரணைக்கு பணகுடி காவல் நிலையத்துக்கு சென்றாராம். அப்போது காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் லைசா ஆகியோர் சுமதியை அவதூறாகப் பேசினராம்.   இதையடுத்து சுமதி,  பணகுடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.  ஆனால் காவல் துறையினர் புகாரை எடுக்கவில்லையாம். இதையடுத்து சுமதி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி காமராஜ்  3 முறை சம்மன் அனுப்பியும் ஆய்வாளர் ஆஜராகவில்லையாம்.  இதையடுத்து ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் லைசா ஆகியோருக்கு பிடியாணை  பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.  
தற்போது ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் மதுரை மாநகரத்திலும்,  உதவி ஆய்வாளர் லைசா கன்னியாகுமரி மாவட்டத்திலும் பணியாற்றி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT