திருநெல்வேலி

பாவூர்சத்திரத்தில் மழையில் சாய்ந்த மரத்தை அகற்ற கோரிக்கை

DIN

பாவூர்சத்திரத்தில் மழையில் சாய்ந்த  மரத்தை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்ற பழமைவாய்ந்த மரம், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீசிய காற்றில் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து,  தீயணைப்புப் படையினர் மரத்தின் கிளைகளை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.  ஆனால் சாய்ந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். 
 முக்கிய சந்திப்பாக விளங்கும் அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக கிடக்கும் மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்து பாவூர்சத்திரம் மக்கள் நல மன்றத் தலைவர் கோபு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை": மோடி | செய்திகள்: சிலவரிகளில் | 20.05.2024

எத்தனை மனிதர்கள்

கனமழை நீடிக்கும்: 9 மாவட்டங்களுக்கு ’ஆரஞ்ச் எச்சரிக்கை’

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : பிரதமர் மோடி

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்

SCROLL FOR NEXT