திருநெல்வேலி

தென்மலை, நெடுவயல் பள்ளிகள் பிளஸ் 1 தேர்வில் 99% தேர்ச்சி

DIN

பிளஸ் 1 அரசுப்பொதுத் தேர்வில் நெடுவயல் அரசு மேல்நிலைப் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
நெடுவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 143 மாணவர்களில் 141 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி 95 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 98 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் முத்துராமலிங்கம், தலைமையாசிரியர் ஜெயபிரகாஷ்ராஜன் உள்ளிட்டோர் பாராட்டினர். மாணவர்களுக்கு ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் திருவேங்கடம் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். 
தென்மலை அரசு மேல்நிலைப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர் கே. கருப்பசாமி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கே. முருகன், பொதுமக்கள் பாராட்டினர். வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி 96 சதவீதமும், நெல்கட்டும்செவல் மாவீரன் பூலித்தேவன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 98.5 சதவீதமும், முள்ளிக்குளம் பாண்டியக்கோனார் அரசு மேல்நிலைப்பள்ளி 90 சதவீதமும் தேர்ச்சிபெற்றுள்ளது. 
சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி 96 சதவீதமும், ஸ்டெல்லாமேரீஸ் மேல்நிலைப்பள்ளி 98.2 சதவீதமும், ராயகிரி ஆர்.என்.எச்.யூ. மேல்நிலைப்பள்ளி 99 சதவீதமும், ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளி 99.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT