திருநெல்வேலி

காவல்கிணறு உபகாரமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

DIN

பணகுடி அருகே உள்ள காவல்கிணறு புனித உபகாரமாதா ஆலயத்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
திருவிழா கொடியேற்றத்தையொட்டி காலை திரியாத்திரை திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாலை 6.30 மணிக்கு வேளாங்கன்னி  மாதா சப்பர ஊர்வலம் நடைபெற்றது.  தொடர்ந்து புனித கொடியை பங்குத் தந்தை மகிழன் அடிகளார் ஜெபம் செய்து அர்ச்சித்தார். அதன் பின்னர் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் சேவியர் டெரன்ஸ் கொடியேற்றினார். 
 நிகழ்ச்சியில் அருள்தந்தையர்கள் பென்சிகர், அமலதாஸ், மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது.   இந்த விழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாள்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.
   திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இம் மாதம் 22-ஆம் தேதி 8-ஆம் திருநாள் அன்று மாலை நற்கருணைப்பவனி நடைபெறுகிறது.  23-ஆம் தேதி 9-ஆம் திருநாள்  அன்று இரவு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. 10-ஆம் திருநாள் காலை ஆயர் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை தலைமையில் பங்கு மக்கள் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT