திருநெல்வேலி

நெல்லையில் 104.2 டிகிரி வெயில்

DIN

திருநெல்வேலியில் புதன்கிழமை 104.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.  இந்நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயிலின் உக்கிரம் மிகத் தீவிரமாகியுள்ளது. கடந்தசெவ்வாய்க்கிழமை 104.5 டிகிரி ஃபாரன்ஹீட்  வெப்பம் பதிவான நிலையில், புதன்கிழமை 104.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முற்பகல் 11 முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். 
குறிப்பாக, பிற்பகல்  வேளைகளில் வீசும் அனல் காற்றால் வாகன ஓட்டிகளும், பேருந்து, ரயில் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். வெயிலின் தாக்கம் இரவிலும் நீடிப்பதால், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினருமே தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT