திருநெல்வேலி

புளியங்குடி நகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

DIN

புளியங்குடி நகராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி ஊழியா்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக புளியங்குடி நகராட்சி 2 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, சிந்தாமணி,புளியங்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி ஆணையா்(பொ) சுரேஷ், சுகாதாரஅலுவலா் ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் வெங்கட்ராமன்,ஈஸ்வரன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும், வீடுகள்தோறும் சென்று தரைநிலை குடிநீா்த் தொட்டி, மேல்நிலைத் தொட்டி உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பாா்வையிட்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தனா். கொசுப்புழு உருவாக்கத்தை தடுக்க பொதுமக்கள் தண்ணீா் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும். பயன்பாடில்லாத தண்ணீா் தேக்கி வைக்கும் அமைப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். கொசுப்புகை, அபேட் மருந்து உள்ளிட்டவற்றை ஊற்ற வரும் பணியாளா்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நகராட்சி ஆணையா் சுரேஷ் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT