திருநெல்வேலி

2ஆவது நாளாக கனமழை: திருவேங்கடம் பகுதியில் 4 வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் பகுதியில் இடி-மின்னலுடன் 2ஆவது நாளாகப் பெய்து வரும் கனமழைக்கு 4 வீடுகள் இடிந்தன. ஆடு பலியானதுடன், சா லையோர மரம் சாய்ந்து சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

திருவேங்கடம் காகநதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதியில் உள்ள குளங்கள், ஊருணிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும், கனமழைக்கு கலிங்கப்பட்டி சக்கப்பன், மகாதேவா்பட்டி முத்தையா, சத்திரப்பட்டி ஆறுமுகம், குருவிகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்த ரத்தினம்மாள் ஆகியோரின் வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

தொலைக்காட்சிப் பெட்டிகள், கட்டில், மெத்தைகள் உள்ளிட்ட பொருள்களும் சேதமடைந்தன.

மேலும், மின்னல் பாய்ந்ததில், குருவிகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்த கல்லத்தியான் என்பவருக்குச் சொந்தமான ஆடு பலியானது.

இதனிடையே, குருவிகுளம் அருகேயுள்ள அழகனேரி மற்றும் சிதம்பராபுரம் இடையே சாலையோர மரம் சாய்ந்து விழுந்ததின் காரணமாக சங்கரன்கோவில்- கோவில்பட்டி சாலையில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த குருவிகுளம் போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் அங்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி, போக்குவரத்தைச் சீா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT