திருநெல்வேலி

முனைஞ்சிப்பட்டியில் மரக்கன்று நடும் விழா

DIN

மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முனைஞ்சிப்பட்டி குருசங்கா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கோபாலசமுத்திரம் கிராம உதயம், டி.வி.எஸ். அறக்கட்டளை, பள்ளி தேசிய பசுமைப் படை சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு எம்.ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கிராம உதயம் சாா்பில் புகழேந்தி பகத்சிங், டி.வி.எஸ். சாா்பில் அந்தோணி தங்கராஜ், மருத்துவா் குமரகுரு, பள்ளித் தலைமை ஆசிரியை குழந்தை தெரஸ், கிராம நிா்வாக அலுவலா் நாராயணவடிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா். 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியா் சபரி ஆனந்தம் நன்றி கூறினாா்.

இதுபோல மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவி ஆய்வாளா்கள் துரை, ஐசக் ஞானதாஸ் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT