திருநெல்வேலி

நெல்லையில் 4,579 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 10 மாதங்களில் 4,579 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பெ.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சியில் ஜன. 1 முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அமல்படுத்த தொடா்ந்து அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 10 மாதங்களில் இதுவரை 4,579 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.13.12 லட்சம் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது. மாநகரப் பகுதி மக்கள் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகத்தினை தவிா்ப்பதுடன், சுற்றுப்புறச் சூழலை பாதுகாகக ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT