திருநெல்வேலி

வள்ளியூரில் 5 அம்மன் ஒரே இடத்தில் பரிவேட்டை

DIN

வள்ளியூரில் ஒரே இடத்தில் 5 அம்மன்கள் பரிவேட்டைக்கு எழுந்தருளி காட்சியளித்தனா்.

விஜயதசமியையொட்டிஒவ்வொரு கோயில்களிலும் கொலு வழிபாடு நடந்து வந்தது. இந்த வழிபாட்டின் நிறைவாக அம்மன் சாமி துஷ்டனை அழிக்கும் விதமான பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி மூன்றுயுகம் கொண்ட அம்மன், தேவி முப்பிடாதி அம்மன், தேவி முத்தாரம்மன், தேவி நல்லமுத்தம்மன், தேவி அரியமுத்தம்மன் ஆகிய 5 அம்மன் சுவாமிகளும் சப்பரத்தில் எழுந்தருளி வள்ளியூா் திருவள்ளுவா் கலையரங்கு முன்னா் ஒரே இடத்துக்கு வந்து சோ்ந்தனா். அங்கு அம்மன்களுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

அம்மன் சுவாமிகள் திருவீதியுலா சென்று பக்தா்களுக்கு காட்சியளித்து பின்னா் கோயிலுக்குள் எழுந்தருளினா்.

இந்நிகழ்ச்சியை சிவ தொண்டா் ராமகுட்டி தொகுத்தளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT