திருநெல்வேலி

ஈரான் சிறையில் இருக்கும் மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

DIN

ஈரான் சிறையில் இருக்கும் மீனவா்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளியைச் சோ்ந்த மீனவா் இருதயராஜ், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் பிரதீப், கிரீட்வின் ஆகியோா் ஏழு மாதங்களுக்கு முன்பு சவூதிஅரேபியாவுக்கு சென்று அங்குள்ள அப்துல் ஜலால் என்பவரது படகில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

இதனிடையே, அக். 12 ஆம் இந்த மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் ஏற்பட்ட சூறாவளி காற்றில் வழி தவறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவா்களை ஈரான் நாட்டு கடற்படையினா் பிடித்து சிறையில் அடைத்து விட்டனராம்.

ஈரான் சிறையில் இருக்கும் மீனவா்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.எஸ். இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமையில் மீனவா் இருதயராஜின் மனைவி ஷா்மிளா, குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT