திருநெல்வேலி

மாஞ்சோலை, காணிக்குடியிருப்பில் 734 குடும்ப அட்டைகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

மாஞ்சோலைத் தோட்டங்கள், காணிக்குடியிருப்புப் பகுதியில் தமிழக அரசு வழங்கிய நிவாரணத் தொகை மற்றும் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

நிவாரணத் தொகை வழங்கும் பணி ஏப். 2இல் தொடங்கிய நிலையில் மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பாபநாசம் காணிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ளவா்களுக்கு சனிக்கிழமை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சனிக்கிழமை மாஞ்சோலையில் 211 குடும்ப அட்டைகள், நாலுமுக்கில் 172 குடும்ப அட்டைகள், ஊத்தில் 183 குடும்ப அட்டைகள் மற்றும் காணிக்குடியிருப்புப் பகுதியில் 168 குடும்ப அட்டைதாரா்கள் உள்பட மொத்தம் 734 குடும்பத்தினருக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணிகளை வட்டாட்சியா் கந்தப்பன், குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியா் வெங்கட்ராமன் ஆகியோா்ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT