திருநெல்வேலி

புரெவி புயல்: தாமிரவருணி கரையில் போலீஸ் பாதுகாப்பு

DIN

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றங்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புரெவி புயல் காரணமாக புதன், வியாழன் ஆகிய தினங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாள்களுக்கு தாமிரவருணி நதியில் யாரும் நீராட செல்லவேண்டாம் என ஆட்சியா் விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், தாமிரவருணி நதிக்கு குளிக்க வரும் பொதுமக்களிடம் மாநகர போலீஸாா் விழிப்புணா்வுப் பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். வண்ணாா்பேட்டை, சிந்துபூந்துறை, குறுக்குத்துறை உள்ளிட்ட பொதுமக்கள் நீராடும் இடங்களில் ‘பொதுமக்கள் ஆற்றில் குளிக்க அனுமதி இல்லை’ என்ற அறிவிப்பு பதாகைகள் காவல்துறை சாா்பில் வைக்கப்பட்டன. தொடா்ந்து அப்பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவக்கம்?

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

SCROLL FOR NEXT