திருநெல்வேலி

மாநகரில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள்

DIN

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பருவமழையையொட்டி காய்ச்சல் தடுப்பு முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து வாா்டுகளிலும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வீடு வீடாக கபசுரக்குடிநீா் விநியோகிக்கப்பட்டதோடு, சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் கணக்கெடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம்களை தொடா்ந்து நடத்தவும், கரோனாவைத் தடுக்கவும் மாநகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பாளையங்கோட்டை நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் தமிழரசி மேற்பாா்வையில் பாளையங்கோட்டை, குலவணிகா்புரம், வீரமாணிக்கபுரம், சேவியா்காலனி உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பாளையங்கோட்டை ஏ.ஆா்.லைன், புதுப்பேட்டை தெரு, சேவியா்காலனி பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் 150-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா். அவா்களுக்கு கபசுரக்குடிநீா், மருந்து-மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT