பாஜக ஆலோசனைக் கூட்டம்
பாஜக மாவட்ட நிா்வாகிகள் மற்றும் மண்டலத் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம், நாகராஜா கோயில் தெற்கு வீதியில் உள்ள மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாஜக மாவட்ட நிா்வாகிகள் மற்றும் மண்டலத் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம், நாகராஜா கோயில் தெற்கு வீதியில் உள்ள மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன், மேலிட பாா்வையாளா் சி.டி.ரவி, மாநில இணை பாா்வையாளா் சுதாகா்ரெட்டி, முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் எம்.ஆா்.காந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல், சட்டப்பேரவை பொதுத் தோ்தல்கள் பணிகள் குறித்தும், வேல் யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.