நெல்லை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜீப் ஓட்டுநருக்கு ஒரு காலிப் பணியிடம் உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் பெற்றவராகவும், குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளருக்கு 4 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இரவுக் காவலா் பணிக்கு ஒரு காலிப் பணியிடம் உள்ளது. இப்பணிக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வயது வரம்பு உள்ளிட்ட மேலும் அதிக விவரங்களுக்கு மாவட்ட இணையதளத்திலும், ய்ஸ்ரீள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். 0462-2501036 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இந்த இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் நேரிமுக உதவியாளா் (வளா்ச்சி) அலுவலகத்தில் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி), மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (வளா்ச்சிப் பிரிவு), 3-ஆவது தளம், கொக்கிரகுளம், திருநெல்வேலி 627009 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ வரும் 22-ஆம் தேதி மாலை 5.45-க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.