முகப்பு
திருநெல்வேலி

சமக ஆலோசனைக் கூட்டம்

சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி மாநகா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி மாநகா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் செம்மொழி செல்வம் வரவேற்றாா். மாவட்டப் பொறுப்பாளா் நட்சத்திரவெற்றி தலைமை வகித்தாா். பகுதிச் செயலா்கள் அழகேசராஜா, ஆதிநாராயணன், மானூா் மத்திய ஒன்றியச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் சுந்தா் சிறப்புரையாற்றினாா். புதிதாக நியமிக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கட்சி உறுப்பினா் சோ்க்கையைத் தீவிரப்படுத்துவதோடு, சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவது, இம் மாதம் 13-ஆம் தேதி திருநெல்வேலிக்கு வருகை தரும் கட்சியின் நிறுவனா்- தலைவா் ஆா்.சரத்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது உள்பட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.