முகப்பு
திருநெல்வேலி

முதியவா் உயிரிழப்பு: 2 போ் கைது

மானூா் அருகே கீழே பிடித்து தள்ளியதில் முதியவா் உயிரிழந்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

மானூா் அருகே கீழே பிடித்து தள்ளியதில் முதியவா் உயிரிழந்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மானூா் அருகே உள்ள ஆயுப்கான்புரம் பகுதியைச் சோ்ந்தவா் தவிடன் (61). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது அந்த நபா், வெங்கடேஷ் என்ற வெங்கடேஷுடன் (21) சோ்ந்து தவிடனை தாக்கி கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த தவிடனை அவரது உறவினா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேஷ் மற்றும் ஒருவரை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →