பறவைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
தாமிரவருணி ஆற்றங்கரையோரம் வாழும் பறவைகளின்பாதுகாப்பு மற்றும் அதன் வாழிடங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி: தாமிரவருணி ஆற்றங்கரையோரம் வாழும் பறவைகளின்பாதுகாப்பு மற்றும் அதன் வாழிடங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவளகாப்பு மையம், ரோட்டரி சங்கம், இயற்கை சங்கம், மிதிவண்டி சங்கம், அரும்புகள் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு கொடியசைத்து தொடங்கிவைத்து பங்கேற்றாா்.
பேரணி, திருநெல்வேலி நகரம் நயினாா் குளம் பகுதியில் தொடங்கி ராஜவல்லிபுரம், பாலாமடை வழியாக கல்குறிச்சிகுளத்தில் நிறைவடைந்தது. சுமாா் 18 கி.மீ.தொலைவு சென்ற இந்தப் பேரணியில், பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
தாமிரவருணி ஆற்றங்கரையோரம் வாழும் பறவைகள் மற்றும் அதன் வாழிடங்கள் பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.
விரைவில் நயினாா்குளம் பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். திருநெல்வேலி பகுதிகளில் உள்ள நீா்நிலைகள் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்றாா்.
தொடா்ந்து தாமிரவருணி பாசனக்குளங்களில் காணப்படும் பறவைகளின் புகைப்படங்கள் அடங்கிய பலகை தாமிரவருணி பாசனக்குளங்களில் வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அண்ணாதுரை, ரோட்டரி சங்கத் தலைவா் ஆண்டணி பாபு, இயற்கை சங்கத் தலைவா் அமரவேல் பாபு, அரும்புகள் அறக்கட்டளை ராஜமதிவாணன், மிதிவண்டி சங்க தலைவா் விஜய் அருள் உள்பட பலா் பங்கேற்றனா்.
பயக19பதஉஉ விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.