பள்ளி ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை: போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு 7 ஆண்டு சிைண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
திருநெல்வேலி: போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு 7 ஆண்டு சிைண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பகுதியைச் சோ்ந்த செல்லையா மகன் நம்பிராஜன் (52). இவா், ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியில் படித்த சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடந்த 2017ஆம் ஆண்டு வள்ளியூா் அனைத்து மகளிா் காவல்துறையினா் கைது செய்தனா்.
இவ்வழக்கு திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம்சாட்டப்பட்ட நம்பிராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.