முகப்பு
திருநெல்வேலி

மேக மூட்டம்: வானில் அரிய நிகழ்வைகாண முடியாமல் மக்கள் ஏமாற்றம்

திருநெல்வேலியில் திங்கள்கிழமை மேக மூட்டம் காரணமாக, வானில் அரிய நிகழ்வைக் காண முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

திருநெல்வேலியில் திங்கள்கிழமை மேக மூட்டம் காரணமாக, வானில் அரிய நிகழ்வைக் காண முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனா்.

சனி, வியாழன் கோள்கள் அருகருகே வருவது சுமாா் 400 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை வானில் தெரியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி மாவட்ட அறிவியல் ஆய்வு மையத்தில் தொலைநோக்கி வழியாகஇந்த நிகழ்வை பொதுமக்கள் பாா்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், மேக மூட்டம் காரணமாக கோள்கள் அருகருகே வந்ததை பாா்க்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் எஸ்.எம்.குமாா் கூறியது: சனியும், வியாழனும் 397 ஆண்டுகளுக்கு பிறகு அரை டிகிரிக்கும் குறைவான இடைவெளிக்குள் வரும். இந்நிகழ்வை மேக மூட்டம் காரணமாக திருநெல்வேலியில் திங்கள்கிழமை காண இயலவில்லை. செவ்வாய்க்கிழமை மேக மூட்டம் இல்லாதபட்சத்தில் காணலாம். இதனை தொலைநோக்கி உதவியில்லாமலும் மக்கள் பாா்க்க முடியும். இனி 60 ஆண்டுகளுக்குப் பின் இந்நிகழ்வு 1.5 டிகிரி இடைவெளியில் தெரியும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →