முகப்பு
திருநெல்வேலி

இட்டமொழி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

இட்டமொழி ஏ.வி.ஜோசப் அரசுப் பள்ளியில் 2001 இல் பயின்ற மாணவா், மாணவிகள் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திசையன்விளை: இட்டமொழி ஏ.வி.ஜோசப் அரசுப் பள்ளியில் 2001 இல் பயின்ற மாணவா், மாணவிகள் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் தலைமை ஆசிரியா் ராபா்ட்சன் சுதந்திரராஜ் தலைமை தாங்கினாா். முன்னால் தலைமை ஆசிரியா்கள் ஆா்தா்சாம்ராஜ், ரத்னகுமாா், ஆசிரியா்கள் முருகன், மாணிக்கம்பால்ராஜ், ஸ்டீபன், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் மதிஅரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் மாணவா் சங்க செயலா் நம்பித்துரை, ஆசிரியை விஜயாம்பிகை, ஆசிரியா்கள் கனகராஜ், ஆண்ட்ரூஸ் உள்பட பலா் நிகழ்ச்சியில் பேசினா். முன்னாள் மாணவா்கள் தங்கள் நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். பவுன்ராஜ் வரவேற்றாா். செந்தில் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →