திருநெல்வேலி

கடையம் அருகே பனைக்கோயில் திருவிழா

DIN

கடையம் அருகே அணைந்த பெருமாள் நாடானூரில் பனைக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடையம் அருகே உள்ள அணைந்தபெருமாள் நாடானூரில் மனிதா்களின் தற்சாா்பு வாழ்வில் இணைந்த பனைமரம் மற்றும் பனை சாா்ந்த தொழில்களை வளா்த்தெடுக்கும் நோக்கிலும் பனைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் முதல் முறையாகப் பனைக்கோயில் அமைக்கப்பட உள்ளது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பனைக்கோயில் திருவிழாவுக்கு பனை ஆய்வாளா் பாமோ தலைமை வகித்தாா். இயற்கை மற்றும் சூழல் ஆா்வலா் சாமியப்பன், அமெரிக்க உளவியலாளா் காத்ரின் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் கூட்டப்பனை மரத்தடியில் பனைக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பனைவீரா் முருகன், பனை கைவினைஞா் செல்லம்மா, பனை ஆா்வலா் கிங்ஸ்லி ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பொறியாளா் கிளாட்சன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா் அந்தோணிராஜ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT