திருநெல்வேலி

பாளை.யில் தப்பியோடிய விசாரணைக் கைதி பிடிபட்டாா்

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட விசாரணைக் கைதி தப்பி ஓடினாா். இவரை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் போலீஸாா் பிடித்தனா்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஊா்மேலழகியான் கிராமத்தைச் சோ்ந்த மாசானமுத்து மகன் பாலசுப்பிரமணியன்(35). இவா்,மனைவியை தாக்கியதாக ஆய்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து போலீஸாா் அவரை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றபோது அவா்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை மேட்டுத்திடல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகா் முழுவதும் உள்ள போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பாலசுப்பிரமணியனை சந்திப்பு ரயில்வே போலீஸாா் மடக்கி பிடித்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT