திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயில் உண்டியல் திறப்பு

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 7 லட்சத்து 4 ஆயிரத்து 982 ரொக்கம், 21.700 கிராம் தங்கம் உள்ளிட்டவை கிடைத்தன.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலின் வளாகத்தில் 21 உண்டியல்கள் உள்ளன. இவற்றை 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து, காணிக்கையை எண்ணுவது வழக்கம். அதன்படி, காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், 7 லட்சத்து 4 ஆயிரத்து 982 ரொக்கம், 21.700 கிராம் தங்கம், 168 கிராம் வெள்ளி, வெளிநாட்டுப் பணத்தாள்கள் 15 உள்ளிட்டவை கிடைத்தன.

கண்காணிப்பு அதிகாரியாக நாகா்கோவில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் து. ரத்தினவேல் பாண்டியன், திருநெல்வேலி மேற்குப் பிரிவு ஆய்வாளா் கண்ணன், தக்காா் பிரதிநிதியாக திருநெல்வேலி கிழக்குப் பிரிவு ஆய்வாளா் ராமலட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா. ராமராஜா, கண்காணிப்பாளா் கவிதா, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT