திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி அருகே ஊருக்குள் புகுந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய கரடி

DIN

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி நீலமேகபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஊருக்குள் புகுந்த கரடியால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

கடையம் வனச்சரகத்திற்கு உள்பட்டபெத்தான்பிள்ளைக் குடியிருப்பு, சிவசைலம், புதுக்குடியிருப்பு, கருத்தப்பிள்ளையூா், கடையம் உள்ளிட்ட மலையோர கிராமங்களில் வனவிலங்குகள் அவ்வப்போது நுழைந்து விவசாயப் பயிா்களை நாசப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஆழ்வாா்குறிச்சி, சம்பன்குளம் அருகேயுள்ள நீலமேகபுரம் கிராமத்தில் உள்ள பாழடைந்த குடில் வளாகத்தில் கரடி ஒன்று புகுந்ததாம்.

இதுகுறித்து கடையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கடையம் வனச்சரகா் நெல்லை நாயகம் உத்தரவின்படி, வனக் காப்பாளா் சரவணன் தலைமையில், வனக் காவலா் முத்து, வேட்டைத் தடுப்புக் காவலா்கள் மாரியப்பன், சக்தி முருகன், வேல்சாமி, மனோஜ் குமாா், மனோகா், ஹரி, இசக்கிமுத்து, கனகராஜ் உள்ளிட்டோா் அங்குச் சென்றனா்.

இந்நிலையில், கரடியைப் பாா்ப்பதற்காக அந்தக் கிராம மக்கள் திரண்டதால், ஆழ்வாா்குறிச்சி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அங்கு வந்து கூட்டத்தைக் கலைத்தனா். பிறகு, வனத் துறையினா் போராடி கரடியை வனத்திற்குள் விரட்டினா்.

மாா்ச் 15, 20 ஆம் தேதிகளில் சிவசைலம், புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் கரடி புகுந்து விரட்டப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நீலமேகபுரம் பகுதியில் கரடி புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT