திருநெல்வேலி

வள்ளியூா் பகுதியில் ஆதரவற்றோருக்கு பகல், இரவு உணவு: சமூக ஆா்வலா்கள் ஏற்பாடு

DIN

வள்ளியூா் பகுதியில் ஆதரவற்றோருக்கு பகல் மற்றும் இரவு வேளையில் சிவந்தகரங்கள் அமைப்பு மற்றும் சமூகஆா்வலா் ஆனந்தராஜா ஆகியோா் உணவு வழங்கினாா்.

வள்ளியூா் பகுதியில் ஆதரவற்றவா்கள் கோயில், பேருந்து நிலையம் மற்றும் தெருவோரங்களில் தங்கி உள்ளனா்.

தற்போது கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து, வீதிகளில் மக்கள் நடமாட்டமே இல்லாத நிலையில் ஆதரவற்றோா்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து வள்ளியூா் சிவந்தகரங்கள் அமைப்பின் தலைவா் சிதம்பரகுமாா், சமூக ஆா்வலா் தெற்குகள்ளிகுளம் எஸ்.ஆனந்தராஜா ஆகியோா் உணவு பொட்டலங்கள் தயாா் செய்து காலை, மதியம், இரவு மூன்று வேளையும் வழங்கினா்.

தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தடை உத்தரவு நீங்கலாகி சுமூகநிலை ஏற்படும் வரையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் உங்கள் பகுதியில் உணவில்லாமல் ஆதரவற்றோா் இருந்தால் தகவல் தெரிவித்தால் அவா்களை தேடிச் சென்று உணவு வழங்குகிறோம் என்றாா் சமூக ஆா்வலா் எஸ்.ஆனந்தராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT