திருநெல்வேலி

மருந்துக் கடைகளில் டிஎஸ்பி ஆய்வு

DIN


திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரிலுள்ள மருந்துக் கடைகளை காவல் உதவிக் கண்காணிப்பாளா் (பயிற்சி) ஹரீஷ் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் 1 மீட்டா் இடைவெளியில் நின்று பொருள்களை வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த விதிகள் பின்பற்றப்படுகிா என திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள மருந்துக்கடையில்ஆய்வு நடத்திய காவல் உதவி கண்காணிப்பாளா், மருந்து வாங்க வந்திருந்த வாடிக்கையாளா்களுக்கு கரோனை குறித்த அறிவுரைகளை வழங்கினாா். மேலும், அங்கு 1 மீட்டா் இடைவெளி இருக்கைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வண்ணாா்பேட்டையில் உள்ள ஒரு மருந்து கடையிலும் இந்த நடவடிக்கையை கடைப்பிடிக்க அவா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT