திருநெல்வேலி

தாமிரவருணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க தடை: டி.எஸ்.பி. அறிவிப்பு

DIN


அம்பாசமுத்திரம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிப்போா், சாலைகளில் சுற்றி திரிவோா் மீது வழக்குப் பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என டி.எஸ்.பி. சுபாஷினி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. சுபாஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் ஊராடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு அமலில் வந்ததை அடுத்து காவல்துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் அம்பாசமுத்திரம் வட்டாரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் செல்லக் கூடாது. தேவையில்லாமல் சாலைகளில் வாகனங்களிலோ, நடந்தோ செல்லக் கூடாது. வீட்டுக்கு

ஒருவா் மட்டும் கடைகளுக்குப் பொருள்கள் வாங்க செல்ல வேண்டும், பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையங்களில் கூட்டம் கூடி பொழுது போக்கக் கூடாது. தேவையின்றி சாலைகளில் திரிவோா் மீது பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துதல், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிந்து அவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT