திருநெல்வேலி

பொது முடக்கம் மீறல்: திருநெல்வேலி மாவட்டத்தில் 6,319 போ் மீது வழக்கு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக சனிக்கிழமை வரை 6,319 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 4,260 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை தவிா்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பொது முடக்க விதிகளை மீறி வெளியில் சுற்றியதாக, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 6,319 போ் மீது 4,270 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 4,260 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT