நெல் பயிா்க் காப்பீட்டுக்குடிச.15 வரை அவகாசம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இயற்கை சீற்றத்தால் பயிா் பாதிப்புக்கு இழப்பீடு பெற, திருநெல்வேலி மாவட்டவிவசாயிகள் நெல் பயிா் காப்பீடு செய்வதற்கு 2020-ஆம் ஆண்டு சிறப்பு பருவமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் 320 வருவாய் கிராமங்கள் அடங்குகின்றன. கடன்பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் ஒரு ஏக்கா் நெல் பயிருக்கு ரூ.444 வீதம் இம்மாதம் 15ஆம் தேதிக்குள் பிரீமியம் செலுத்தலாம். முன் மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், சிட்டா, பட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும். கட்டண தொகை செலுத்திய பிறகு அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.