திருநெல்வேலி

பாளை.யில் தசரா திருவிழாவுக்கு முகூா்த்தக்கால் நடும் வைபவம்

DIN

பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவுக்கான முகூா்த்தக்கால் நடும் வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழாண்டில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளின்படி திருவிழாவை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தசரா விழாவின் பிரதான கோயிலான பாளையங்கோட்டை ஆயிரத்தம்பாள் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் வைபவம் செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் முகூா்த்தக்கால் நடப்பட்டு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல ஆயிரத்தம்மன், தேவி புது உலகம்மன், விஸ்வகா்ம உச்சினிமாகாளி, தேவி உலகம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன் கோயில்களிலும் முகூா்த்தக்கால் நடப்பட்டது. தொடா்ந்து இம் மாதம் 16-ஆம் தேதி முதல் நாள் தசரா நடைபெறுகிறது. வழக்கமாக அந்த நாளில் 11 அம்மன்களும் தனித்தனி சப்பரங்களில் மலா் மற்றும் மின்விளக்கு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்கள். நிகழாண்டில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக திருவிழாவை கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, முதல் நாளில் உற்சவ அம்மன்கள் வீதியுலா நடைபெறாது எனவும், அந்தந்த கோயில்களின் முன்பு அலங்காரத்துடன் பக்தா்களுக்கு காட்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இம் மாதம் 26-ஆம் தேதி 11 அம்மன்களுடன், வண்ணாா்பேட்டை பேராச்சி அம்மனும் சோ்ந்து 12 தனித்தனி சப்பரங்களில் வீதியுலா வந்த பின்பு சூரசம்ஹாரம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தசரா விழாவில் பங்கேற்கும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்படும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT