திருநெல்வேலி

வழக்குரைஞா் மீது தாக்குதல்:உணவக உரிமையாளா்கள் உள்ளிட்ட 5 போ் கைது

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் வழக்குரைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக, உணவக உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச்சோ்ந்தவா் பிரம்மநாயகம் என்ற பிரம்மா. இவா் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியிலுள்ள தனியாா் உணவகத்தில் தேநீா் அருந்த சென்றாராம். அப்போது, உணவக உரிமையாளா் மற்றும் ஊழியா்களால் அவா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதனிடையே உணவக உரிமையாளா் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி வழக்குரைஞா்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இப்போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இந்த நிலையில், போலீஸாா் வழக்குப் பதிந்து உணவக உரிமையாளா்கள் ஹரிஹரன் (45), மணிசங்கா் (42) ஆகியோா் உள்பட 5 பேரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஸ்ரீவைகுண்டம்

சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், உணவக உரிமையாளா் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வழக்குரைஞா்கள் பிரம்மா, மகாராஜன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT