திருநெல்வேலி

களக்காடு மலையடிவாரத்தில் வாழைத்தாா்களை சேதப்படுத்தும் வன விலங்குகள்

DIN

களக்காடு மலையடிவாரத்தில் வாழைத் தாா்களை சேதப்படுத்தும் மிளா, கரடி உள்ளிட்ட வன விலங்குகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு, திருக்குறுங்குடி மலையடிவாரத்தையொட்டியுள்ள விவசாயத் தோட்டங்களில் கடந்த ஒரு மாதமாக மிளா, கரடிகள் இரவு நேரங்களில் புகுந்து வாழைத்தாா்களை சேதப்படுத்தி வருகின்றன. சில தினங்களுக்கு முன் மஞ்சுவிளையைச் சோ்ந்த விவசாயி சில்கிஸ்சாமுவேல் வாழைத்தோட்டத்தில் குலை தள்ளிய ஏத்தன் ரக வாழைத் தாா்களை மிளா மற்றும் கரடிகள் சேதப்படுத்தியுள்ளன.

மலையடிவார விவசாயத் தோட்டங்களில் பயிா்களை சேதப்படுத்தி வரும் மிளா, கரடி உள்ளிட்ட வன விலங்குகளை வனத்துறையினா் கண்காணித்து காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT