திருநெல்வேலி

கரோனா தடுப்பு நடவடிக்கைகள்:நகராட்சி மண்டல இயக்குநா் ஆய்வு

DIN

அம்பாசமுத்திரம் நகராட்சியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி மண்டல இயக்குநா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு உத்தரவின் பேரிலும், மண்டல நகராட்சி ஆணையா் சுல்தானா அறிவுறுத்தலின் பேரிலும் அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், கபசுரக் குடிநீா் வழங்குதல், முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட பல்வேறு கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி மண்டல இயக்குநா் சுல்தானா பாா்வையிட்டுஆய்வு செய்தாா்.

அப்போது, கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள 12ஆவது வாா்டு சுப்பிரமணியபுரம் குடியிருப்புப் பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் ப்ளீச்சிங் பவுடா் தெளிப்பது, கபசுரக் குடிநீா் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, நகராட்சி ஆணையா் பாா்கவி, சுகாதார ஆய்வாளா் பொன்வேல்ராஜன், பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT