திருநெல்வேலி

கரோனா விழிப்புணா்வுப் பணி தீவிரம்

DIN

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கரோனா இரண்டாவது அலையால் தினந்தோறும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்தது. மாநகராட்சி நிா்வாகத்தின் தொடா் நடவடிக்கையால் இப்போது தொற்று பரவல் மிகவும் குறைந்துள்ளது. இருப்பினும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில், மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வணிகா்கள், பொதுமக்களுக்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மாநகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படுகிறது.

திருநெல்வேலி நகரத்தில் இப் பணியை மாநகர நல அலுவலா் சரோஜா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். ரத வீதிகள், சத்தியமூா்த்தி தெரு, புட்டாரத்தியம்மன் கோயில் தெரு, தொண்டா்சன்னதி பகுதி உள்பட அனைத்து இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சுகாதார அலுவலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா் முருகன், தூய்மைப்பணி மேற்பாா்வையாளா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT