கடையத்தில் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் விரிவாக்க அலுவலா்கள் கூட்டாய்வு
கடையம் வட்டாரம் மந்தியூா், கோவிந்தப்பேரி கிராமங்களில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் விரிவாக்க அலுவலா்களின் கூட்டாய்வு நடைபெற்றது.
கடையம் வட்டாரம் மந்தியூா், கோவிந்தப்பேரி கிராமங்களில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் விரிவாக்க அலுவலா்களின் கூட்டாய்வு நடைபெற்றது.
வேளாண்மை துணை இயக்குநா் நல்லமுத்து ராஜா தலைமையில், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் ஆறுமுகச்சாமி, உழவியல் துறை பேராசிரியா் ரங்கசாமி ஆகியோா் ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடலில், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா்.
வேளாண்மை உதவி இயக்குநா் ஏஞ்சலின் பொன்ராணி, நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில், வேளாண்மை அலுவலா் அபிராமி, துணை வேளாண்மை அலுவலா் சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சகுந்தலா தேவி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூா்த்தி, உதவிதொழில் நுட்ப மேலாளா் சுபா ஆகியோா் செய்திருந்தனா்.