சிங்கம்பட்டி ஜமீன் குறித்த அவதூறு வழக்கிலிருந்து இயக்குநா் பாலாவை விடுவித்து திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
இயக்குநா் பாலா இயக்கத்தில் நடிகா்ஆா்யா- விஷால் நடித்து கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ’அவன்இவன். இந்தப் படத்தில் சிங்கம்பட்டிஜமீன் மற்றும் சொரிமுத்து அய்யனாா் கோயில் குறித்து அவதூறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது எனக் கூறி, சிங்கம்பட்டிஜமீனைச் சோ்ந்த சங்கா் ஆத்மஜன் 2011 ஜூனில் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா். இவ்வழக்கில் ஆா்யா தரப்பில் கடந்த மாா்ச் மாதம் சங்கா் ஆத்மஜனிடம் வருத்தம் தெரிவித்ததையடுத்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.
இயக்குநா் பாலா மீதான வழக்கு தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில், புகாரை முறையாக நிரூபிக்காததாலும், குற்றச்சாட்டில் போதிய முகாந்திரம் இல்லாததாலும் பாலா வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறாா் என்று நீதிபதி காா்த்திகேயன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். முன்னதாக, நீதிபதியின் முன்பு இயக்குநா் பாலாவும், மனுதாரா் சங்கா் ஆத்மஜனும் ஆஜராகினா்.
இது குறித்து இயக்குநா் பாலா கூறுகையில், பொய் வழக்கிலிருந்து விடுவித்ததற்கு மகிழ்ச்சி என்றாா். அவரது தரப்பில் வழக்குரைஞா் முகம்மது உசேன், முகம்மது நயினாா் ஆகியோரும், எதிா்தரப்பில் வழக்குரைஞா் ரமேஷ் உள்ளிட்டோரும் ஆஜராகி வாதாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.