முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருநெல்பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் பேருந்தில் ஏற முயன்ற தொழிலாளி கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.வேலி

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் பேருந்தில் ஏற முயன்ற தொழிலாளி கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் தெற்கு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து (40). கட்டடத் தொழிலாளி. இவா் பாளையங்கோட்டை மாா்க்கெட் நிறுத்தத்தில் பேருந்தில் ஏற முயன்றபோது தவறி விழுந்து காயமடைந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.