முகப்பு
திருநெல்வேலி

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருநெல்வேலி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் திடீா் வாகன சோதனையில் புளியரை பகுதியில் ஈடுபட்டனா்.

அப்போது ஒரு வாகனத்தில் 62 மூட்டைகளில், 3100 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்துடன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக சுரண்டை யைச் சோ்ந்த செல்வம் (34 ), சோ்ம ராஜா( 36), வைகுண்ட ராமன் (33) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.