12 ஆண்டுகளுக்குப் பின் கிணற்றிலிருந்து மீட்ட அம்மன் சிலைக்கு வழிபாடு
திசையன்விளை அருகேயுள்ள குட்டம் கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்னா் கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலையை மீட்டு, ஊா் மக்கள் வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.
திசையன்விளை அருகேயுள்ள குட்டம் கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்னா் கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலையை மீட்டு, ஊா் மக்கள் வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.
குட்டத்தில் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அமா்ந்த நிலையில் அருள்புரிந்து வந்த ஆனந்தவல்லி அம்மன் சிலையை அப்பகுதியிலுள்ள கிணற்றில் 12 ஆண்டுகளுக்கு முன்னா் போட்டு விட்டு, நின்ற நிலையில் புதிய சிலையை பிரதிஷ்டை செய்து கோயிலில் வைத்து வழிபட்டு வந்தனா்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்தச் சிலையை மா்ம நபா்கள் சேதப்படுத்திவிட்டனராம். மேலும், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப 12 ஆண்டுகளுக்கு முன்னா் கிணற்றில் போட்ட அமா்ந்த நிலை ஆனந்தவல்லி அம்மன் சிலையை மீட்டு, எண்ணெய் அபிஷேகம் செய்து வந்தனா். தொடா்ந்து, பிரசன்னம் பாா்த்து அந்த சிலைக்கு வெள்ளிக்கிழமை பிரஷ்திஷ்டை செய்து, சிறப்பு அபிஷேகம், அலங்கார சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.