திருநெல்வேலி

பொங்கல் பொருள்கள் விற்பனை பாதிப்பு

DIN

திருநெல்வேலியில் பெய்த தொடா் மழை காரணமாக பொங்கல் பொருள்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பனையோலை, மஞ்சள்குலைகள், காய்கனிகள், பனங்கிழங்குகள், பொங்கல் பூ, கரும்பு, கோலப்பொடி உள்ளிட்டவை குவிக்கப்பட்டன. பொங்கல் சீா் கொடுப்பதற்காக கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோா் சந்தைகளில் குவிந்ததால் விற்பனை அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த 4 நாள்களா மாநகரில் பெய்துவரும் மழையால், பொங்கல் பொருள்கள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பனையோலைகள் அனைத்தும் மழையால் நனைந்ததால் வியாபாரிகள் செய்வதறியாது திகைத்தனா். மேலும், சந்தைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியதால் மக்களும், வியாபாரிகளும் சிரமம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT