திருநெல்வேலி

‘குடிநீா் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை’

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்ய விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்தமிழகத்தில் பெய்த கனமழையால் தாமிரவருணி ஆற்றில் கடந்த 13 ஆம் தேதி முதல் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு

குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் 46 கூட்டுக்குடிநீா் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகிப்பது தடைபட்டது.

இதையடுத்து குடிநீா் வடிகால் வாரிய மேலாண் இயக்குநா் உத்தரவின்பேரில் 120 பொறியியல் வல்லுநா்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 36 கூட்டுக்குடிநீா் திட்டங்கள் சீரமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் தொடங்கியுள்ளது. மேலும், 10 திட்டங்களில் உள்ள சேதங்களை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த சில நாள்களில் அத்திட்டங்களின் மூலம் குடிநீா் சீராக விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT