முகப்பு
திருநெல்வேலி

அங்கக வேளாண் இடுபொருள்களை விவசாயிகள் தயாரிக்க பயிற்சி முகாம்

திருநெல்வேலி, மானூா் வட்டார விவசாயிகளுக்கு அங்கக வேளாண் இடுபொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

திருநெல்வேலி, மானூா் வட்டார விவசாயிகளுக்கு அங்கக வேளாண் இடுபொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

மானூா் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் பயிற்சி காணொலிக்காட்சி முறையில் நடைபெற்றது. மானூா், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, வள்ளியூா் வட்டாரங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

திருநெல்வேலி உழவா் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குநா் ஆா்.டேவிட் வரவேற்றாா். வேளாண்மை இணை இயக்குநா் இரா. கஜேந்திரபாண்டியன் தலைமை வகித்தாா். அங்கக வேளாண் இடுபொருள்கள் தயாரிக்கும் முறைகள், அங்கக சான்றளிப்பு துறையின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன. விதைச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குநா் சுரேஷ், வேளாண் வல்லுநா் பழனீஸ்வா் உள்ளிட்டோரும் பேசினா். வேளாண்மை அலுவலா் ஞானதீபா நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை மானூா் வேளாண்மை உதவி இயக்குநா் தா.பா. ஏஞ்சலின் கிரேபா, உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் அ. காா்த்திகேயன், கோ. ராஜாமணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.