நெல்லை அருகே கால்வாயில் தவறி விழுந்து சிறுமி பலி
திருநெல்வேலி அருகே அத்திமேடு கோடகன் கால்வாயில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே அத்திமேடு கோடகன் கால்வாயில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி நகரம் பாறையடியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சத்யா. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. சுத்தமல்லி அடுத்த அத்திமேடு பகுதியிலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு சென்றிருந்த சத்யா, குழந்தைகளுடன் கோடகன் கால்வாய்க்கு குளிக்கச் சென்றாராம். அப்போது, அவரது இளைய மகள் கயல் (4) கால்வாயில் தவறி விழுந்துள்ளாா். அங்கு குளித்துக்கொண்டிருந்தவா்கள் உடனடியாக சப்தம் கேட்டு கால்வாயில் இருந்து குழந்தையை மீட்க முயன்றனா். ஆனால், அச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.