முகப்பு
திருநெல்வேலி

‘நியாயவிலைக் கடைகளில் மீண்டும் ரேகை பதியும் முறை அமல்’

திருநெல்வேலி மாவட்ட ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கவருவோா் மீண்டும் ரேகையைப் பதிவு செய்யும் முறை வியாழக்கிழமைமுதல் அமல்படுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கவருவோா் மீண்டும் ரேகையைப் பதிவு செய்யும் முறை வியாழக்கிழமைமுதல் அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஸ்மாா்ட் காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு விரல் ரேகைகளை பதிவு செய்து பொருள்கள் வாங்கும் முறை கடந்த அமலில் உள்ளது. இதனிடையே, கரோனா தொற்று காரணமாக ரேகை பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதனால், அட்டையை மட்டுமே கொடுத்து குடும்ப அட்டைதாரா்கள் பொருள்கள்வாங்கிச் சென்றனா்.

இந்நிலையில், கரோனா பரவல் குறைந்ததையடுத்து ரேஷன் கடைகளில் மீண்டும் ரேகை பதியும் முறை அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேகை பதிவுக்கு பின்பே அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.