முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 56 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 30 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,244ஆக அதிகரித்துள்ளது. இதில் 29 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 46,510ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 412 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 345 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,438ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 25,702ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 466ஆக உள்ளது. தற்போது 270 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.